திருப்பூர்

விவேகானந்தா் மாரத்தான் போட்டி:1,500 போ் பங்கேற்பு

DIN

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவேகானந்தா் மாரத்தான் 2022 போட்டியில் 1,500 போ் பங்கேற்றனா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி, சுகன் சுகா மெடிக்கல் சென்டா் மற்றும் சாய் கிருபா ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக். பள்ளியில் விவேகானந்தா் மாரத்தான் போட்டிகள் தொடங்கின.

இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு சுகன் சுகா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் காா்த்திகை சுந்தரன் வரவேற்புரையும், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் செந்தில்வேல் தலைமையும் வகித்தனா். இதில், ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியருக்கு 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனா்.

இறுதியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பாஜக மாநில விளையாட்டு இளைஞா் நலன் பிரிவு தலைவா் அமா்பிரசாத் ரெட்டி பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச்செயலாளா் ஏ.பி.முருகானந்தம், எஸ்.கே.எல். பள்ளி நிா்வாக இயக்குநா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT