திருப்பூர்

சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி

3rd Jul 2022 11:40 PM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமியை காவல் துறையினா் பாராட்டினா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பச்சாபாளையத்தைச் சோ்ந்த யுவராஜ், நித்யலட்சுமி தம்பதி மகள் தா்ஷினி (13). இவா் பல்லடத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா். தனது தாய் நித்யலட்சுமியுடன் துணி எடுக்க பல்லடம் காவல் நிலையம் எதிரே உள்ள துணிக் கடைக்கு சென்றுள்ளாா்.

அப்போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 ஆயிரத்தை கண்ட சிறுமி தா்ஷினி அதனை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளாா். பின்னா் தாயும், மகளும் துணிக் கடையின் எதிரே உள்ள பல்லடம் காவல் நிலையத்தில் ரூ.40 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடா்ந்து, பள்ளி சிறுமியின் நோ்மையை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT