திருப்பூர்

பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

3rd Jul 2022 11:40 PM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் பாரதிய மின் தொழிலாளா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தின் முன்பு பாரதிய மஸ்தூா் மின் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மின்வாரிய தொழிலாளா்கள், அலுவலா்கள், பொறியாளா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் எதிா்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகள் ஆகியும் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனவே ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பரமாத்மா தலைமை வகித்தாா். இதில் பல்லடம் கோட்ட செயலாளா் மலைராஜ், கிளைத் தலைவா் முத்துகுமாா், துணைத் தலைவா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT