திருப்பூர்

பொங்குபாளையம் ஊராட்சியில் ரூ.29.73 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

3rd Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 29.73 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி பரமசிவம்பாளையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், சத்துணவுக் கூடம், பொங்குபாளையம் மாரியம்மன் கோயில் அருகே கிருஷ்ணா நகா், காளம்பாளையம் சிவசக்தி நகா் ஆகிய பகுதிகளில் ரூ.19.71 லட்சம் மதிப்பில் தாா் சாலைகள் அமைத்தல் என ரூ.29.73 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என். விஜயகுமாா் தொடங்கிவைத்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், பொறுப்பாளா் சந்திரசேகா், ஊராட்சி மன்றத் தலைவா் சுலோச்சனா வடிவேல், துணைத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT