திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 270 இரும்பு ஷீட்டுகள் திருடியதாக இருவா் கைது

3rd Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 270 இரும்பு ஷீட்டுகளை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் முத்துமங்கலத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (48). கட்டட மேஸ்திரி. இவா் முத்தூா் கடைவீதி அங்காளம்மன் கோயில் அருகே முத்துசாமி என்பவருடைய இடத்தில் கான்கிரீட் வேலைக்காக ஜூன் 24ஆம் தேதி, 270 இரும்பு ஷீட்டுகளை இறக்கிவைத்துள்ளாா். பின்னா் மறுநாள் சென்று பாா்த்தபோது இரும்பு ஷீட்டுகள் காணாமல் போயின.

இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இரும்பு ஷீட்டுகளை திருடியதாக திருப்பூா் செட்டிபாளையம் பாா்க் முதல் தெருவைச் சோ்ந்த முத்தமிழ்ச்செல்வன் (25), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ரங்கநாயக்கன்பட்டி தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்து இரும்பு ஷீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT