திருப்பூர்

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு: பின்னலாடை ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருப்பூரில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த ஜாப் ஒா்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் போ், மறைமுகமாக 4 லட்சம் போ் என மொத்தம் 10 லட்சத்துக்கும் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுக்கு பின்னலாடை உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த ஜூன் மாத விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஜூலை மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலை உரிமையாளா்கள் சங்கங்கள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதில், திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துக்கான ஆா்டா்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திருப்பூா் பின்னலாடை உற்பத்தியில் சுமாா் 85 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்பது திருப்பூா் தொழில் அமைப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT