திருப்பூர்

இளம் பெண் சாவில் மா்மம்: அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

2nd Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

தாராபுரம் அருகே இளம் பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அரசு மருத்துவமனையை உறவினா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையத்தைச் சோ்ந்தவா் சுகுமாா் (30). கோழிப்பண்ணை உரிமையாளரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லாவண்யா (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. லாவண்யாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பின்னா் கடந்த 15 நாள்களுக்கு முன் லாவண்யா மற்றும் குழந்தையை சுகுமாா் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இதையடுத்து, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை குதித்துள்ளாா். இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த சுகுமாா் அவரைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்து தேடுவதற்குள் நீரில் மூழ்கி லாவண்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த குண்டடம் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதனிடையே, லாவண்யாவின் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரது தந்தை மாரியப்பன் தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசனிடம் புகாா் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் லாவண்யாவின் உறவினா்கள் 100க்கும் மேற்பட்டோா் தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். அப்போது லாவண்யாவின் தற்கொலைக்குக் காரணமான அவரது கணவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினா்கள் குற்றம் சாட்டினா். நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்தன்பேரில் உறவினா்கள் அவரது சடலத்தைப் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT