திருப்பூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

2nd Jul 2022 05:03 AM

ADVERTISEMENT

போதைப் பொருள் ஒழிப்பு நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் போக்குவரத்து போலீஸாா் மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீஸாா் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை காங்கயம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் கொடியசைத்து துவக்கிவைத்தாா். காங்கயம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு துவங்கிய இப்பேரணி, காவல் நிலைய ரவுண்டானா, நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், போலீஸாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT