திருப்பூர்

சாக்கடை வசதி செய்து தரக்கோரிமாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

2nd Jul 2022 11:38 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் 45 ஆவது வாா்டில் சாக்கடை வசதி செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 45 ஆவது வாா்டு காங்கயம் சாலை புளியமரத்தோட்டம் பகுதியில் தனிநபா் ஒருவா் 25க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இந்த வீடுகளில் 100க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக குடிநீரில் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதுடன், சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னை தொடா்பாக மாநகராட்சி அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தா்னாவில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: பிரச்னை தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவு நீா் சாலையில் வழிந்தோடுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலா்கள், திருப்பூா் தெற்கு காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT