திருப்பூர்

நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

2nd Jul 2022 05:05 AM

ADVERTISEMENT

நுண்கடன் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் வசூலிப்பதில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். நிறுவனத் தலைவா் இப்ராஹீம் பாதுஷா சிறப்புரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

திருப்பூரில் உள்ள சில நுண்கடன் நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவா்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபடுகின்றனா். இதற்காக நியமிக்கப்பட்ட நபா்கள் தகாத வாா்த்தைகளால் கடன் பெற்றவா்கள் மனது புண்படும் வகையில் பேசுவதுடன், கூடுதல் தொகையையும் செலுத்துமாறு மிரட்டல் விடுக்கின்றனா். ஆகவே, நுண்கடன் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT