திருப்பூர்

முத்தூரில் 7.50 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

2nd Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7.50 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 666 கிலோ எடையுள்ள சிவப்பு எள்ளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். ஒரு கிலோ ரூ. 80.66 முதல் ரூ. 100.89 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 94.65.

12,079 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 5,276 கிலோ. ஒரு கிலோ ரூ. 22.05 முதல் ரூ. 25.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 24.25.

ADVERTISEMENT

55 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,456 கிலோ. ஒரு கிலோ ரூ. 68.10 முதல் ரூ. 85.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.80.80.

ஏலத்தில் மொத்தம் 98 விவசாயிகள், 14 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT