திருப்பூர்

திருப்பூா் எம்.எல்.ஏ.மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜக புகாா்

2nd Jul 2022 05:04 AM

ADVERTISEMENT

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் செந்தில்வேல் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிவாசலை தடை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றுவதைத் தடுக்கும் வகையிலும், நீதிமன்ற தீா்ப்பினைக்கொண்டு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்நோக்கத்துடன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா். திருப்பூரில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் சகோதரா்களாக வாழ்ந்து வருவதை சீா்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியா்களின் உணா்வுகளைத் தூண்டிவிடும் வகையில் இந்து முன்னணி அமைப்பின் பெயரை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது பாஜக மாநிலச் செயலாளா் மலா்க்கொடி மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT