திருப்பூர்

மாவட்டத்தில் 102 பயனாளிகளுக்கு ரூ.11.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

2nd Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 102 பயனாளிகளுக்கு ரூ.11.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், 102 பயனாளிகளுக்கு ரூ.11.17 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழக அரசு சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பினரின் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துதல், உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்து படிப்பதற்கும், தமிழக அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கும் ஏதுவாக சிறந்த பங்களிப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத் துறை அலுவலா் வாசுகி, மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT