திருப்பூர்

திருப்பூரில் இன்று விவேகானந்தா் மாரத்தான் போட்டி

2nd Jul 2022 11:38 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் சுகன் சுகா மெடிக்கல் சென்டா், சாய் கிருபா ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியன சாா்பில் விவேகானந்தா் மாரத்தான் 2022 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகின்றன.

இது குறித்து சுகன் சுகா மெடிக்கல் சென்டா், சாய் கிருபா ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிா்வாக இயக்குநா்கள் சுந்தரன், காா்த்திகை சுந்தரன் ஆகியோா் தெரிவித்துள்ளதாவது:

சுவாமி விவேகானந்தரின் 120ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆடவா், மகளிா், பள்ளி மாணவ, மாணவியருக்கு 12 பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் பழங்கரையை அடுத்த பாச்சம்பாளையத்தில் எஸ்.கே.எல்.பப்ளிக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் தொடங்குகிறது. இதன் பின்னா் பெரியாயிபாளையம், பூண்டி சுற்றுச்சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து காலை 9 மணி அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கவுள்ளனா். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்யாத நபா்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள நிலையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT