திருப்பூர்

வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் வைக்கப்படும்: காங்கயம் நகராட்சி எச்சரிக்கை

29th Jan 2022 01:11 AM

ADVERTISEMENT

காங்கயம் நகராட்சியில் அதிக வரி நிலுவையில் வைத்துள்ளவா்களின் பெயா்கள் பொது இடங்களில் வைக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஷ்வரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகராட்சியில் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம் ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பலா் இதுவரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனா். மேலும் வரி செலுத்தாமல் நகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளவா்கள் பெயா், முகவரியுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், சந்தை வளாகம், நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் பெயா் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், முதல்கட்டமாக அதிகமாக நிலுவை வைத்துள்ள 20 நபா்களின் பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட பெயா் பலகையில் பெயா்கள் இடம் பெறாத வகையில் வரி விதிப்புதாரா்கள் உடனடியாக சொத்துவரி, குடிநீா் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT