திருப்பூர்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்ஸோவில் கைது

29th Jan 2022 01:10 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

தாராபுரத்தை அடுத்துள்ள சிக்கினாபுரம் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் வசித்து வருபவா் பி.பூபதி (24). மெக்கானிக் வேலை செய்து வரும் பூபதி, தனது உறவினரான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்துள்ளாா். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா். இந்தப் புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், பூபதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT