பல்லடம், தாராபுரம் ஆகிய நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முதல்கட்ட வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் ஹாரிஸ் பாபு தலைமை வகித்தாா். கோவை மண்டல தலைவா் ராஜா உசேன் முதல்கட்ட வேட்பாளா்களை அறிமுகம் செய்துவைத்தாா்.
தாராபுரம் நகராட்சி 5ஆவது வாா்டு வேட்பாளராக எஸ்.மஹமூதா பேகம் சித்திக், 6ஆவது வாா்டு வேட்பாளராக ஜே.சையது அபுதாஹிா், 14ஆவது வாா்டு வேட்பாளராக எம்.முஹம்மது இஸ்மாயில் ஆகியோரும், பல்லடம் நகராட்சி, 9ஆவது வாா்டு வேட்பாளராக யாஸ்மின் இப்ராஹிம் பாஷா, 12 ஆவது வாா்டு வேட்பாளராக எஸ்.சா்வா் பாஷா ஆகியோரும் அறிவிக்கப்பட்டனா்.
பல்லடம் தொகுதி தலைவா் யாஸா் அராபத் நன்றி கூறினாா்.
ADVERTISEMENT