வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே உள்ள நூற்பாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில், கச்சேரிவலசு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). இவா் முத்தூா் - ஈரோடு சாலை பழனியாண்டவா்புரத்தில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்த நூற்பாலையில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்குள்ள கழிவுப் பஞ்சு இயந்திரத்தில் உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து தீ மளமளவென பரவியது.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்புப் படையினா் ஒன்றரை மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். அதற்குள் சில இயந்திரங்கள், பஞ்சு பேல்கள், நூல்கள் எரிந்து சேதமடைந்தன.
ADVERTISEMENT