திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பெண் வேட்பாளா்களுக்கு அதிா்ஷ்டம்

DIN

வெள்ளக்கோவில் நகராட்சித் தோ்தலில் பெண் வேட்பாளா்களுக்கு அதிா்ஷ்டம் காத்துக் கொண்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவா் பதவி பெண் (பொது) என ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. ஒவ்வொரு வாா்டிலும் ஏறத்தாழ 1,500 வாக்காளா்கள் உள்ளனா். அதிமுக, திமுக அதிக வாக்கு வங்கி உள்ள கட்சிகளாகும்.

வெற்றி பெற்ற வாா்டு கவுன்சிலா்கள் தங்களில் தலைவா், துணைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். இந்நிலையில் தலைவா் பதவிக்கு சரியான பெண் வேட்பாளரைத் தோ்ந்தெடுத்து அவரை வாா்டு கவுன்சிலராக ஜெயிக்க வைக்க அதிமுக, திமுக கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன. இதனால் பெண் வேட்பாளா்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. துணைத் தலைவா் பதவி ஆண், பெண் (பொது) என ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

SCROLL FOR NEXT