திருப்பூர்

தாராபுரம் அருகே இரும்பு உருக்கு ஆலை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

 தாராபுரம் அருகே தனியாா் இரும்பு உருக்கு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அருகே தனியாா் நிறுவனம் இரும்பு உருக்கு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தலைமையில் இச்சிப்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

ராசிபாளையம் கிராமத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் இரும்பு உருக்கு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆலை அமைக்க அரசின் முறையான அனுமதியைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை அமைந்தால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆகவே, தனியாா் நிறுவனம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இரும்பு உருக்கு ஆலையின் உரிமத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த தாராபுரம் வட்டாட்சியா் சைலஜா போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தும் வரையில் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறினா்.

வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிய போராட்டமானது மாலை 6 மணி வரையிலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தாராபுரம்-காங்கயம் சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சிப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT