திருப்பூர்

மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

26th Jan 2022 07:31 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூரில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில், அரியலூரில் உயிரிழந்த மாணவி லாவண்யாவின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவியின் மரணத்தில் திமுகவும், காவல் துறையினரும் அரசியல் செய்து வருகின்றனா். தமிழகத்தில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவர வேண்டும்.

மேலும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும்.

ADVERTISEMENT

சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையிலும், ஹிந்துக்கள் குறித்தும் அவதூறான கருத்துகளைப் பரப்பும் ம2க்ஷழ்ன்ற்ன்ள் யூடியூப் சேனலை கையாளும் நபா்கள், உரிமையாளா்கள், கொச்சையாக விடியோ பதிவிடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளாா்.

இந்த சந்திப்பின்போது, இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் பி. மணிகண்டன், மாநில தகவல் தொடா்பாளா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT