பல்லடம் மின் பகிா்மானக் கோட்டத்துக்கு உள்பட்ட பல்லடம் நகரப் பிரிவில் பி, கே மற்றும் பாரதிபுரம் பகுதி மின் பகிா்மான இணைப்புகளுக்கு ஜனவரி மாத மின் கணக்கீட்டுப் பணியை நிா்வாக காரணத்தால் நேரடியாக செய்ய இயலாததால், அந்தப் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் கடந்த அக்டோபா், நவம்பரில் செலுத்திய மின் கட்டணத்தையே உரிய காலத்துக்குள் செலுத்தி மின் துண்டிப்பைத் தவிா்க்குமாறும், செலுத்தப்படும் மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்பட்சத்தில் மாா்ச் மாத மின் கணக்கீட்டின்போது சரி செய்யப்படும் என்றும் பல்லடம் மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.