திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 1,490 பேருக்கு கரோனா

26th Jan 2022 07:29 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,490 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,490 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,12,184 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 7,935 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 864 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,03,214 போ் குணமடைந்துள்ள நிலையில் 1,035 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT