திருப்பூர்

ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

26th Jan 2022 07:30 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

12ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, அனைத்து துறை அலுவலா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதையடுத்து, திருப்பூா் வடக்கு மற்றும் திருப்பூா் தெற்கு வட்டங்களைச் சோ்ந்த இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

மேலும், தேசிய வாக்காளா் தினத்தையொட்டி தோ்தல் ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூா் அம்மாபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா்களான செ.சூா்யாபகவதி, பா.விநாயக்ஸ்ரீராம் ஆகியோருக்கு ஆட்சியா் எஸ்.வினீத் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ், தோ்தல் வட்டாட்சியா் எஸ்.முருகதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT