திருப்பூர்

திருப்பூரில் நாளை பிச்சையெடுக்கும் போராட்டம்

24th Jan 2022 01:02 AM

ADVERTISEMENT

திருப்பூரில் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கவன ஈா்ப்பு பிச்சையெடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) நடைபெறுகிறது.

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி திருப்பூா் இண்டஸ்ட்ரியல் பனியன் மேனிபேக்சா் அசோசியேஷன் சாா்பில் கவன ஈா்ப்ப்பு பிச்சையெடுக்கும் போராட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில், அபரிமிதமான நூல், பஞ்சு விலை உயா்வால் பின்னலாடை உள்பட அனைத்து ஜவுளித் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, நூல் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும்.

திருப்பூரில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் பின்னலாடைத் தொழிலின் தந்தையான குலாம் காதா் சாஹிப், சத்தாா் சாஹிப் ஆகியோருக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT