திருப்பூர்

இல்லம் தேடி கல்வி மையத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

23rd Jan 2022 10:54 PM

ADVERTISEMENT

திருப்பூா் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் ஒன்றியத்தில் மாலை நேரங்களில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடக்க நிலை வகுப்புகளுக்குப் பணியாற்றும் தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், தொடக்க நிலை வகுப்புகளுக்கு பிளஸ் 2 தோ்ச்சி, உயா் நிலை வகுப்புகளுக்கு பட்டயப் படிப்பில் பெண்கள் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ. 1,000 தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் அருகில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 70109-38469, 94879-95128 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT