திருப்பூர்

பல்லடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

18th Jan 2022 04:12 AM

ADVERTISEMENT

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தீா்வு காண வலியுறுத்தி பல்லடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.பரமசிவம் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பி.முத்துசாமி, திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா் சங்கத் தலைவா் வேலுசாமி, துணைச் செயலாளா் பாலாஜி உள்பட பலா் பங்கேற்றனா்.

முடிவில் சோமனூா் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் சோமசுந்தரம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT