திருப்பூர்

திருப்பூரில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

18th Jan 2022 04:11 AM

ADVERTISEMENT

திருப்பூரில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றச் செயலாளா் சிட்டி பழனிசாமி, தென்னம்பாளையம் பகுதி செயலாளா் ஆா்.அன்பகம் திருப்பதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதேபோல, கே.வி.ஆா்.நகா், செல்லம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காங்கயத்தில்...

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் அதிமுக நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்து, எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் அதிமுகவினா் பலா் பங்கேற்றனா்.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவில் கடை வீதி நான்கு சாலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம், முத்தூா் உள்ளிட்ட 21 இடங்களில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

உடுமலையில்...

உடுமலை ரயில்வே நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னா். மேலும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற விழாவில் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT