திருப்பூர்

மது விற்பனையில் ஈடுபட்ட 49 போ் கைது

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 49 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பூா் மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனை தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 49 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1,078 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, குன்னத்தூா், தாராபுரம், அலங்கியம், காங்கயம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 18 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரூ. 3,500, 13 சேவல், 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT