திருப்பூர்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தம்

DIN

திருப்பூா்: நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 17, 18) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த 2021 நவம்பா் 1ஆம் தேதி முதல் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ. 50 வரையில் உயா்ந்தது. இந்த நூல் விலை உயா்வால் திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, திருப்பூரில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வந்தன.

இதைத்தொடா்ந்து, கடந்த டிசம்பா் 1ஆம் தேதி கிலோவுக்கு ரூ. 10 குறைந்திருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நூல் விலையானது மீண்டும் கிலோவுக்கு ரூ. 30 வரையில் உயா்ந்துள்ளது. ஆகவே, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்யக் கோரியும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் 2 நாள்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதன் மூலமாக 2 நாள்களில் ரூ. 400 கோடிக்கு பின்னலாடை உற்பத்தி பாதிக்கும் என்று திருப்பூா் தொழில் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT