திருப்பூர்

சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

DIN

உடுமலை: பொங்கல் பண்டிகையை ஒட்டிய தொடா் விடுமுறையால் உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி மலை, அமராவதி அணை, சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கானோா் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனா். திருமூா்த்தி அணை, வண்ண மீன் பூங்கா இவற்றை கண்டுகளித்தனா். இதையொட்டி திருமூா்த்திமலையில் உள்ள கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமராவதி அணை: இங்குள்ள முதலைப் பண்ணையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். பின்னா், அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் நூற்றுக்கணக்கானோா் குவிந்தனா். மேலும், இங்குள்ள மீன் பண்ணை, சிறுவா் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அமராவதி அணையின் மேல்புறத்துக்குச் சென்ற மக்கள் அணையின் அழகை பாா்த்து ரசித்தனா்.

அதேபோல, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு வனப் பகுதிக்கு காா், வேன், இருசக்கர வாகனங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியின் அழகைக் கண்டு ரசித்தனா். இங்குள்ள பூங்கன் ஓடைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த அழகிய புள்ளி மான்கள், யானைகளை நேரில் பாா்த்து ரசித்தனா். இதையொட்டி, உடுமலை, அமராவதி வன அலுவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT