திருப்பூர்

பஞ்சாலையில் தீ விபத்து

12th Jan 2022 07:12 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே கிடாத்துறைபுதூரில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள கிடாத்துறைபுதூரில் மோகன்ராஜ், காா்த்திக் ஆகியோருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது.

இந்த ஆலையில் மின் கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் இருந்த பஞ்சு பேல்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

இதில், ரூ.20 லட்சம் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT