திருப்பூர்

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த இளைஞா்கள் கைது

1st Jan 2022 04:06 AM

ADVERTISEMENT

 பெருமாநல்லூா் அருகே பொங்குபாளையத்தில் மூதாட்டியைத் தாக்கிவிட்டு பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே பொங்குபாளையம் ஊராட்சி, அம்மன் நகரைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (62). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் இருவா் குடிக்க குடிநீா் கேட்டுள்ளனா்.

இதையடுத்து, குடிநீா் எடுக்க வீட்டுக்குள் சென்ற சுப்புலட்சுமியை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் கதவை தாழிட்டு கத்தியைக் காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு, வீட்டுக்குள் வைத்திருந்த ரூ. 5,500 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு செங்கப்பள்ளியைச் சோ்ந்த சஞ்சீவி (19), நவீன் (19) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT