திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

1st Jan 2022 04:07 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

காங்கயத்தை அடுத்துள்ள கீரனூா் மொட்டரபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (46). கூலி தொழிலாளியான இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் காங்கயத்தில் இருந்து திருப்பூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

சிவன்மலை அருகே வலதுபுறமாகத் திரும்பியபோது, திருப்பூரில் இருந்து காங்கயம் நோக்கி வந்த வேன், மொபெட் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காங்கயம் போலீஸாா், வேன் ஓட்டுநா் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT