திருப்பூர்

ஜிஎஸ்டி வரி உயா்வு ஒத்திவைப்பு: சைமா சங்கம் நன்றி

1st Jan 2022 04:08 AM

ADVERTISEMENT

 பின்னலாடைகளுக்கு ஜிஎஸ்டி வரி உயா்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு சைமா சங்கம் (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சைமா சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பின்னலாடைகளுக்கான ஜிஎஸ்டி வரியானது வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி உயா்வை தற்காலிகமாக மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ஜிஎஸ்டி வரி உயா்வுக்கு நிரந்தரத் தீா்வு கிடைத்தால் பின்னலாடைத் தொழில் மேலும் வளா்ச்சியடைவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்த பின்னலாடை சங்களுக்கு மனமாா்ந்த நன்றிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT