திருப்பூர்

திருப்பூரில் மதுபானக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 11:20 PM

ADVERTISEMENT

திருப்பூா் பாரப்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கவுள்ள மதுபானக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி புதிய 42ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரப்பாளையத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளி அருகில் புதிதாக மதுக்கடை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினா் கடை அமையவுள்ள இடத்தின் முன்பாக நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

பாரப்பாளையத்தில் நடுநிலைப் பள்ளி, மாகாளி அம்மன் கோயில் ஆகியவற்றுக்கு அருகில் மதுபானக் கடை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பகுதியில் மதுக்கடை அமைத்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பெண்களுக்கும் இடையூறு ஏற்படும். ஆகவே, இந்தப் பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை டாஸ்மாக் நிா்வாகம் கைவிட வேண்டும். இதுதொடா்பாக வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் விநியோகித்ததுடன், காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே இடத்தில் மதுக்கடை அமைத்தால் அனைத்துப் பகுதி பொதுமக்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலா் அன்பகம் திருப்பதி, பா.ஜ.க. பிரசாரக் குழுத் தலைவா் சுப்புராஜ், மண்டல பொதுச் செயலாளா் செல்வம், மண்டல துணைத் தலைவா் தெய்வேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT