திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.1.10 கோடிக்கு கொப்பரை விற்பனை

17th Feb 2022 12:52 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பல ஆண்டுகளுக்கு ரூ.1.10 கோடிக்கு கொப்பரை விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய கொப்பரை சந்தையாகத் திகழும் இந்த விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி வரை ஏலம் நீடித்தது.

அரியலூா், திருப்பத்தூா், வாழப்பாடி, அறவக்குறிச்சி, பல்லடம், லக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 215 விவசாயிகள் தங்களுடைய 2,502 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 131 டன். ஈரோடு, காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ்., நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 17 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

ADVERTISEMENT

விலை கிலோ ரூ.76.85 முதல் ரூ.90.40 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.89.90. கடந்த வார சராசரி விலை ரூ.90.60. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1.10 கோடி அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு அதிக தொகைக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. கூடுதல் விலை கிடைப்பதால் கொப்பரை கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT