திருப்பூர்

விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பிரச்னை: தொழிற்சங்கத்தினா் போராட்டம்

11th Feb 2022 05:17 AM

ADVERTISEMENT

விசைத்தறியாளா்கள் கூலி உயா்வுப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒப்பந்த கூலி உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை எவ்வித தீா்வும் ஏற்படாததால் விசைத்தறியாளா்கள் பல இடங்களில் ஆா்ப்பாட்டங்களும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் விசைத்தறியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை அரை நிா்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சோ்ந்தவா்கள் நாமம் வரைந்த பதாகைகளை கழுத்தில் மாட்டிக் கொண்டு, சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT