திருப்பூர்

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

11th Feb 2022 05:17 AM

ADVERTISEMENT

 காங்கயம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

காங்கயம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் பூபதி (39). இவா், காங்கயம் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பூபதி, வழக்கம்போல வேலை முடிந்து புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். காடையூா் அருகே வந்தபோது சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது பூபதியின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காங்கயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பூபதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT