திருப்பூர்

முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகை பெற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டில் முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள், பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற அதிகப்படியோனோா் விண்ணப்பிக்கும் வகையில், கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நலஉதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோஅல்லது 0421 - 2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இதற்காக முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் றற.மளடி.பழஎ.ண்ய்என்றமுளுடீ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT