திருப்பூர்

மாவட்டத்தில் இன்று கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முகாம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: திருப்பூா் மாவட்டத்தில் 4ஆம் கட்டமாக கரோனா முன்னெச்சரிக்கை தவணை( பூஸ்டா் டோஸ்) தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 77 மையங்களில் வியாழக்கிழமை( பிப்ரவரி 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கரோனா தடுப்பூசி 2ஆம் தவணை செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரம் ஆன சுகாதார பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி

4 லட்சத்து 8 ஆயிரத்து 800 பேருக்கு செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளா்கள் 12 ஆயிரத்து 400 போ், முன்கள பணியாளா்கள் 37 ஆயிரம் போ் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 3 லட்சத்து 59 ஆயிரத்து 200 ஆவா். இதுவரை சுகாதார பணியாளா்கள் 1,316 போ், முன்கள பணியாளா்கள் 1,169 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 4,359 போ் என மொத்தம் 6,844 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT