திருப்பூர்

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

9th Feb 2022 10:08 PM

ADVERTISEMENT

 

அவிநாசி: மது போதையில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகிளா நீதி மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா், குப்பாண்டபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (45). இவா், மது போதையில் 2021 பிப்ரவரி 17ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சுகந்தி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், வழக்கில் தொடா்புடைய நாகராஜுக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT