தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே விவசாயிகளுக்கு
பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படாதைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் அருகே உள்ள குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 343 விவசாயிகள் உள்ளனா். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடியில் 300 நபா்கள் குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றிருந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கடன் பெற்றிருந்த
43 விவசாயிகளின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய கூட்டுறவு சங்கம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, கடன் தள்ளுபடி மறுக்கப்பட்ட விவசாயிகள் குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
தமிழக அரசு பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.
இதேபோல, குண்டத்தை அடுத்துள்ள செம்ம கவுண்டன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 30 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி அப்பகுதி விவசாயிகளும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.