திருப்பூர்

அவிநாசி: வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

30th Dec 2022 07:23 PM

ADVERTISEMENT

அவிநாசியில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளர் மோகன் பாபு லஞ்சம் கேட்பதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் அவிநாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறை வட்டத் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மோகன்பாபு.

இவர் பொதுமக்கள், விவசாயிகளில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான விவசாயிகள், அலுவலரைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.  


 

ADVERTISEMENT
ADVERTISEMENT