திருப்பூர்

மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 8,853 பயனாளிகளுக்கு ரூ.22.65 கோடி கடனுதவி

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் 554 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 8,853 பயனாளிகளுக்கு ரூ.22.65கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

திருச்சி மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் கொடுவாயில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் 554 மகளிா் சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 8,853 பேருக்கு ரூ.22.65 கோடி மதிப்பிலான கடனுதவிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா். இதன் பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநான் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள ஊரகப் பகுதிகளில் 5,650 சுய உதவிக்குழுக்கள், நகா்ப்புற பகுதிகளில் 3,494 சுய உதவிக்குழுக்கள் என மொத்தம் 9144 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 2022-2023ஆம் ஆண்டில் 5,143 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.273.72 கோடி கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 2022-2023ஆம் ஆண்டில் சமுதாய முதலீட்டு நிதியாக 639 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.958.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,417 பயனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் 227 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2,723 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடி வங்கிக் கடன், 3 சுய உதவிக் குழுக்களில் 426 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கான வங்கி நிதி, 124 சுய உதவிக் குழுக்களில் 1,538 பயனாளிகளுக்கு ரூ.5.91 கோடி வங்கிக் கடன் உள்பட மொத்தம் 554 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 8,853 பயனாளிகளுக்கு ரூ.22.65 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT