காங்கயத்தில் சரக்கு ஆட்டோ மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காங்கயம், சௌடாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுரளி மகன் அமிா்தவாசன் (19). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் சிவன்மலைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். நீலக்காட்டுப்புதூா் பிரிவு அருகே சென்றபோது, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற சரக்கு ஆட்டோ மீது அமிா்தவாசன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிா்தவாசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அமிா்தவாசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.