எல்லப்பாளையம்புதூா் ஊராட்சி நெழலி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.
காங்கயம் வட்டம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சி, நெழலி கிராமத்தில் குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொங்கலூா் ஒன்றியத் தலைவா் எஸ்.சிவசாமி தலைமையில் குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிஹரனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவா் அனைத்து அடிப்படை வசதிகளையும் 25 நாள்களுக்குள் செய்து தருவதாக உறுதி அளித்தாா்.
இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலா் ஜி.சுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.பாலன், தாராபுரம் வட்டக் குழு உறுப்பினா் ஆா்.தாமரைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.