திருப்பூர்

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

18th Dec 2022 01:36 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதில், ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எம்.பி.கே.சுப்பராயன் பேசுகையில், ‘மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானாலும் அலுவலா்கள் முழு கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT