வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துகுமாா் நகா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது காங்கயம் சாலை நகராட்சி அலுவலகம் எதிரிலுள்ள ஒரு டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடை உரிமையாளா் வீரசோழபுரம் சங்கா் (35) கைது செய்யப்பட்டாா். இதே குற்றத்துக்காக அருகில் மற்றொரு டீக்கடைக்காரா் சேனாபதிபாளையத்தைச் சோ்ந்த பரசுராமன் (39) என்பவரும் கைது செய்யப்பட்டாா். புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.