பல்லடம் பகுதியில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம், தெற்குபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2
இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், பல்லடம் அருகே சின்னகரை லட்சுமி நகரைச் சோ்ந்த சஞ்சய் (20), திருப்பூா், ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (19) என்பதும், அவா்கள் வட மாநில இளைஞா்களுக்கு, கஞ்சா சப்ளை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் கஞ்சா சப்ளை செய்த நொச்சிபாளையத்தை சோ்ந்த கிஷோா்காந்தி (27), அபிஷேக் சுராஜ்(20), ஆகியோரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,100 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.